Latestமலேசியா

நஜிப்புக்கு எதிராக விரைவில் 1எம்டிபி விசாரணை! – மகாதீர்

கோலாலம்பூர், மே.15- 1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரம் தொடர்பில், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது கூடிய விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

நஜிப் மீது விசாரணையை தொடங்கும் பொருட்டு, அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பொறுப்பில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தாம் நம்புவதாக மகாதீர் தெரிவித்தார்.

“எங்களின் மூத்த அதிகாரிகள், ஆதாரங்கள் என்று நம்பப்படும் முக்கிய பாரங்களை எங்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், நஜிப்பை குற்றஞ்சாட்டுவதற்கு தேவையான ஆதாரங்கள் கூடிய விரைவில் கிடைக்கப் பெற்று, விசாரணை தொடங்கப்படலாம்” என்று தி வால் ஸ்திரீட் ஜேர்னல் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் வீடியோ வாயிலாக பேசிய போது மகாதீர் அவ்வாறு கூறினார்.

இருந்த போதிலும், நஜிப்பை விசாரணை செய்யவிருப்பவர்களை நம்புவதில் தமக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“நஜிப்பை விசாரணை செய்யவிருப்பவர்கள், இதற்கு முன்பு, அவரின் கீழ் பணியாற்றியவர்கள். அவர்கள், நஜிப்பிற்கு ஏதாவது வகையில் உதவக் கூடும். இந்தப் புதிய அரசாங்கத்திற்கு அவர்கள் நேர்மையாக இருப்பார்களா என்பது கேள்விக் குறியே” என்றார் அவர்.

1எம்டிபி நிறுவனத்திலிருந்து ‘மாயமாகிய’ அந்த 4.5 பில்லியன் அமெரிக்க டாலரை (ரிம.18.19 பில்லியன்) மீண்டும் கைப்பற்ற நஜிப் உதவினால், அவரை விடுவிக்கும் வகையில் அரசாங்கம் ஏதேனும் ஒப்பந்தம் செய்துக் கொள்ளுமா என்ற கேள்விக்கு “எந்த ஒப்பந்தமும் செய்யப்படாது” என்று துன் மகாதீர் பதிலளித்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker