Latestசினிமா

நடிகை சாவித்ரியின் மது குடிக்கும் காட்சிகள் தேவையா?- சிரஞ்சிவி

சென்னை, மே.15- மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை தமிழில் ” நடிகையர் திலகம்”, தெலுங்கில் “மகாநதி” என்ற பெயர்களில் திரைப்படமாகி வெளியாகி இருக்கிறது. அவர் மதுவுக்கு அடிமையானவர் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். சாவித்ரியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் பல காட்சிகளில் குடிப்பது போல நடித்திருக்கிறார்.

இப்படத்தை நடிகர் சிரஞ்சீவி பார்த்த பின்னர் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். பின்னர் இயக்குனர் நாக் அஸ்வினிடம் பேசிய போது சாவித்ரி வாழ்க்கை சரிவுக்கு காரணம் அவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானது தான் என்பது போல் படத்தில் காட்சி அமைத்திருக்கிறீர்களே, இதற்கு சாவித்ரி மகள் அல்லது அவரது குடும்பத்தினர் யாருமோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்று கேட்டர்.

சிரஞ்சீவியின் கேள்விக்கு இயக்குனர் நாக் அஸ்வின் பதில் அளித்தார். அவர் கூறும் போது, உண்மையை சொல்வதென்றால் சாவித்ரி மகள் தான் தனது தாய்க்கு மதுப் பழக்கம் இருந்ததையும் அது அவரது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே அது மாறியிருந்தது என்ற தகவலையும் தெரிவித்தார் எனக் குறிப்பிட்டார்.

அதை அவரது வாழ்க்கையிலிருந்து பிரித்து பார்க்க முடியவில்லை படத்தை பார்த்த அவரது மகள் விஜய சமூண்டிஸ்வரி எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

சாவித்ரியின் இறுதி நாட்களின் பரிதாபத்தை சொல்வதை விட அவரது வாழ்வின் சந்தோஷத் தருணங்களை கொண்டாடுவதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அதனால் தான் அவரது குடும்பத்தினரும் படத்தை பார்த்து பரவசம் அடைந்தனர். ஒரு வேளை சாவித்ரியே இந்தப் படத்தை எடுக்க எனக்கு துணையாக இருந்திருக்கலாம் என எண்ணுகிறேன். அதனால் தான் இதுவரை சட்டப்பூர்வமான ஆட்சேபனையோ, தடையோ இப்படத்தில் நான் சந்திக்கவில்லை. சாவித்ரி ஆன்மா இப்படத்தை முடிக்க எங்களுக்கு துணை நின்றுள்ளது என்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker