Latestவிளையாட்டு

நிக்கோல் வெளியே! சிவசங்கரி உள்ளே!

கோலாலம்பூர்,மே.15-மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையான டத்தோ நிக்கோல் டேவிட், இல்லாத பிரிட்டிஷ் பொது ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியாக இவ்வாண்டு போட்டி அமைந்துள்ளது.

செல்வாக்குமிக்க பிரிட்டிஷ் ஸ்குவாஷ் போட்டியில் இருந்து காயம் காரணமாக நிக்கோல் விலகிவிட்டார். எட்டு முறை உலக ஸ்குவாஷ் சாம்பியனாக வாகை சூடியிருக்கும் அவர், கடந்த 2000இல் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 2005 ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடையே நிக்கோல் ஐந்து முறை பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியனாக வாகைச் சூடியுள்ளார். 34 வயதுடைய நிக்கோல் பங்கேற்காத நிலையில், நாட்டின் இளம் ஸ்குவாஷ் வீராங்கனையான எஸ்.சிவசங்கரி இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

19 வயதுடைய சிவசங்கரி, உலக வரிசையில் 38ஆவது இடத்தில் இருக்கிறார். முதல் சுற்றில் பிரிட்டனைச் சேர்ந்த வீராங்கனையை வென்று சிவசங்கரி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker