Latestசினிமா

‘பிக்பாஸ்’ வீட்டினுள் நான் புகுந்தால் வீடே தீப்பற்றி எரியும்! – ராய் லட்சுமி

சென்னை, மே.15- ‘பிக்பாஸ்’ வீட்டிற்குள் நான் நுழைந்தால் வீடே தீப்பற்றி எரியும் எனத் தீப்பொறியை உரசி போட்டு உள்ளார் பிரபல நடிகையாக ராய் லட்சுமி.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் வரும் ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் 2 தொடங்க உள்ளதால் தற்போது முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் கமல் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய அரசியல் கட்சி மற்றும் கருத்து குறித்து முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே வெளிப்படுத்தினார் கமல்.

இந்நிலையில் பிக்பாஸ் 2 இல் கலந்து கொள்ள இருக்கும் நடிகர்கள் யார் என்ற பெயர் பட்டியல் ஒரு பக்கம் வாட்ஸ் ஆப் மூலம் பரவி வரும் வேளையில், ராய் லட்சுமி பெயரும் அதில் இடம் பெற்று உள்ளது.

இந்நிலையில் இது பற்றி வாய் திறந்த ராய்லட்சுமி, அடிக்கடி என் பெயரை இது போன்ற நிகழ்வில் புகுத்தி வதந்தியை பரப்பி வருகிறீர்கள். நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் அந்த வீடே பற்றி எரியும் அப்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் அதை தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

ஆகவே நான் இதில் கலந்து கொள்ளாதது அவர்களுக்கு எவ்வளவோ நல்லது என நினைக்கிறேன் என தெரிவித்து உள்ளார். இதன் மூலம் இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா அல்லது இப்பவே சுய விளம்பரத்திற்காக கொளுத்தி போடுகிறார? என்ற கேள்வி பரவலாகி இருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker