Latestவிளையாட்டு

” வாயைத் திறக்கமாட்டேன்!,” – நெய்மார்

பாரிஸ்,மே.15-பிரான்ஸ் கால்பந்து லீக் போட்டியில் இவ்வாண்டின் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வுப் பெற்றிருக்கும் பி.எஸ்.ஜி குழுவின் கோல் மன்னன் நெய்மார், அக்குழுவை விட்டு வேறு எங்கும் போவதாக இல்லை என்று அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காலில் காயமடைந்து, விளையாட முடியாமல் இருந்து வந்த போதிலும், பிரான்ஸ் கால்பந்து லீக்கின் சிறந்த ஆட்டக்காரராக நெய்மார், சக வீரர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

அவர் பி.எஸ்.ஜி குழுவுக்கு கடந்த ஓராண்டு காலமாக விளையாடி வருகிறார். அக்குழுவை விட்டு அவர் வெளியேறுவார் என ஊடகங்கள் ஆருடங்கள் கூறிவருகின்றன.

“இதுபற்றிக் கருத்துரைக்க மாட்டேன், நான் பி.எஸ்.ஜிக்கு தொடர்ந்து விளையாடுவேன். நான் வாயைத் திறந்தாலே, கிளப் மாறப்போகிறேன் என்று கதை கட்டி வருகிறார்கள்” என்றார் அவர்.

மேலும் எனது முழு கவனமும் அடுத்த மாதம் ரஷ்யாவில் தொடங்கவிருக்கும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில், பிரேசில் குழுவை வழிநடத்துவதில் தான் என் கவனம் இப்போது உள்ளது இருக்கிறது என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker