Latestமலேசியா

அரசியல் குத்தகை வழி வேலை: 17,000 பேர் நிலை மறு பரிசீலனை!

கோலாலம்பூர், மே. 16 – அரசியல் நியமனங்கள் மூலமாக, வேலையில் இருந்து வரும் 17 ஆயிரம் பேரின் நிலை குறித்து அரசாங்கம் மறு பரிசீலனை செய்யும்.
அரசாங்கப் பணம் நிறைய விரயமாகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் சொன்னார்.

அரசாங்கச் செலவினத்தைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிறைய அதிகாரிகள் குத்தகை அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் அரசுக்கு இவர்கள் தேவைப்பட்டதால் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் மகாதீர். குறைந்த வருமானத்தில் வேலை செய்யும் வாகன ஒட்டுனர்கள் போன்ற பணிகளில் உள்ளவர்களைத் தவிர, இதர அரசியல் பணி நியமனங்களில் உள்ளவர்களின் குத்தகைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker