Latestசினிமா

‘அருவி’க்கு பின் 150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்!

சென்னை, மே.16- ‘அருவி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். இவர் தற்போது 150க்கும் மேற்பட்ட கதைகளை வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். அருவி மூலம் கிடைத்த நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் தாம் அவ்வாறு செய்ததாக அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘அருவி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் இந்த அதிதி பாலன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார்.

படத்தின் வெற்றிக்கு பின் முக்கியமாக அதிதியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் விருதுகளும் கிடைத்தன என்பது ஒரு புறம் இருக்க அந்தப் படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்த படம் எதையும் தான் ஒப்புக்கொள்ள மனம் ஒப்பவில்லை என பிடிவாதம் பிடிக்கிறார் அருவி.

அவரின் நட்பு வட்டம் விசாரித்ததில் அவர் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 150 படங்களை வேண்டாம் என்று மறுப்பு சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.
அருவி மூலம் தனக்கு கிடைத்த நல்லப் பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

வித்தியாசமான அதே நேரத்தில் வலுவான பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அவரின் நண்பர்கள், இப்படியே சில மாதங்கள் போனால் உன்னை எல்லோரும் மறந்து விடுவார்கள்

எனவே வருகிற படங்களை ஒப்புக்கொள் என்று அறிவுரை சொல்லி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகள் சும்மாவே இருந்தாலும் பரவாயில்லை பத்தோடு பதினொன்றாக ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று அதிதி சொல்லி வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker