Latestமலேசியா

‘உடனடியாக அரசியலுக்கு திரும்ப மாட்டேன்!’ -அன்வார்

கோலாலம்பூர், மே 16 – “உடனடியாக, நான் மலேசிய அரசியலுக்குத் திரும்ப மாட்டேன்” என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், முதன் முறையாக சிகாம்புட்டிலுள்ள தம்முடைய இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

“நான் இப்போது ஒரு பிரஜையாக திரும்ப இருக்கிறேன். நான் சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ள உள்ளேன். ஹார்வார்டு, ஜார்ஜ்டவுன் மற்றும் சில இஸ்லாமிய நாடுகளில் உறை நிகழ்த்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள விருக்கிறேன்” என்றார் அவர்.

பிரதமர் துன் மகாதீரும், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸீசாவும் தங்களின் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருவர். நாட்டின் நிர்வாகத்தில் இவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நான் முழு அளவில் ஒத்துழைப்பு நல்கி வருவேன் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று அன்வார் சொன்னார்.

நீதித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட பல துறைகளில் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் திட்டங்களை இவர்கள் மேற்கொள்வார்கள் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker