Latestஇந்தியா

கர்நாடகாவில் அரசியல் பேரம்:! எம்.எல்.ஏ.க்கள் ‘சிறை’ வைப்பு

பெங்களூர், மே.16- கர்நாடகாவில் ஆட்சி அமையும் வரை காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனிப்பட்ட தங்கும் விடுதியில் ‘சிறை’ வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடிக்கணக்கில் விலை கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்க பாஜக தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டது.

கர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் பாஜக , காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சி (மஜக) சார்பாக பெங்களூரில் தனித்தனியாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பாஜக கூட்டத்தில் எடியூரப்பா சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்றே ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருந்தார் எடியூரப்பா.

இந்நிலையில் இன்றும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதே போல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 78 பேரில் 66 பேர் மட்டும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மதச் சார்பற்ற ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 37 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் இருவர் வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மஜக தலைவர் குமாரசாமி, காங்கிரசுடன் சேர்ந்து தான் ஆட்சி அமைப்போம். அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் பாஜகாவுடன் மஜக சேருமோ என்ற சந்தேகம் நீங்கியுள்ளது.

இதற்கிடையில் தங்கள் ஆதரவில் ஆட்சி அமையும் வரை காங்கிரஸ் ஏம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் ‘சிறை’ வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் ஈர்க்க இருதரப்பும் பகிரங்கப் பேரங்களில் ஈடுபாட்டு வருவதாகவும் கோடிக்கணக்கண்க்கில் எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்படுகிறார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker