Latestமலேசியா

சமிக்ஞை விளக்கில் நின்றிருந்த 16 கார்களை மோதிய லோரி!

அலோர் ஸ்டார்,மே.16- நேற்று இங்குள்ள சிம்பாங் கோலா சாலையில் சமிக்ஞை விளக்குக்காக நின்றுக் கொண்டிருந்த 16 கார்களை, லோரி ஒன்று மோதித் தள்ளியது.

 

அலோர் மெங்கெடு சாலையிலிருந்து கோலக் கெடா சாலைக்கு செல்வதற்கு, மேம்பாலத்தின் வழியாக இறங்கிக் கொண்டிருந்த லோரியின்பிரேக்செயல் இழந்ததால் அது கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றுக் கொண்டிருந்த வாகனங்களை மோதியது.  

மாலை மணி 4 அளவில் நிகழ்ந்த அவ்விபத்தில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் கார்களில் மாட்டிக்கொண்டதால் தீயணைப்புப் படையினர் அவர்களை வெளியேற்ற கார்களை வெட்டியெடுக்க நேர்ந்தது.

அவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டுச் செல்லப்பட்டனர்.  லோரி ஓட்டுனர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாகவுகோத்தா செதார் மாவட்ட போலிஸ் தலைமை அதிகாரி முகமட் ரோஸி ஜிடின் தெரிவித்தார்

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker