Latestமலேசியா

சரவாக் ஊழல்: ஆதாரத்தைக் காட்டுங்கள்! -துன் மகாதீர்

கூச்சிங், மே.16- சரவாக்கில் ஊழல் நடந்ததாகக் கூறுபவர்கள், அதற்கான ஆதாரங்களை காட்டவேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

ஊழல் தொடர்பான ஆதாரத்தைக் காட்டினால், தான் தகுந்த நடவடிக்கையை எடுக்கத் தயாராக உள்ளதாக அவர் இன்று நடைபெற்றச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சரவாக் மாநில அரசாங்கத்தின் ஊழலை துன் மகாதீரின் நிர்வாகம் விசாரணை செய்யுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

‘நாங்கள் இந்நாட்டின் அரசாங்கத்தை அமைப்பதில் மிகவும் அதிக வேலையாக இருப்பதால் சரவாக் மாநில அரசாங்கத்துடன் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறினார்.

சரவாக்கில் நடந்த ஊழலுக்கான போதிய ஆதாரம் தன்னிடம் உள்ளதாகக் கூறும் டத்தோ அம்பிகாவின் குற்றஞ்சாட்டைப் பற்றி வினவியபோது, இதுவரை டத்தோ அம்பிகா தன்னை சந்திக்கவில்லை எனவும் துன் மகாதீர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker