Latestஉலகம்

சிறார் பாலியல்: கனடிய  பிரமுகர் நேப்பாளத்தில் கைது!

ஒண்டரியோ, மே 16- கனடாவின் உயரிய விருதினைப் பெற்றவரும் அனைத்துலக ரீதியில் குழந்தைகள் நல அமைப்புகளில் பங்கேற்று சேவையாற்றி  வருபவருமான   பீட்டர் டல்கிலிஸ்,  சிறார்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நேப்பாளத்தில் கைது செய்யப்பட்டார்.

இரண்டு சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டல்கிலிஸின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 13 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

ஒண்டரியாயோவில் பிறந்த டல்கிலிஸ் அனைத்துலக ஆதரவற்ற குழந்தைகள் எனும்  தொண்டு நிறுவனங்களின் மூலம்  உதவி வழங்கி வந்தவர். ஆப்கானிஸ்தானில் யுஎன் எபிதாட், லைபீரியாவின் யுஎன் மிஷன் எமர்ஜென்சி, ரெஸ்போன்ஸ் உட்பட பல மனித நேய ஏஜென்சிகளுடன்  பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

பெரும்பாலான நேரத்தை குழந்தைகள் மற்றும் தெருக் குழந்தைகளுக்காக செலவிட்டவர். 2015 ஆம் ஆண்டு நேப்பாளத்தில் 9,000 பேரை பலிவாங்கிய பெரும் நிலநடுக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு உதவியவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மனித நேய பணிக்காக அவருக்கு 2016 ஆம் ஆண்டு கனடாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகிய ‘ஆர்டர் ஆஃப் கனடா’ என்னும் விருது வழங்கப்பட்டது.

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை கல்வி, வேலை மற்றும் சுற்றுலா என ஆசைக்காட்டி அழைத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது போலீசார் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட பின் பல வாரங்களாக போலீசார் அவரை பின் தொடர்ந்தனர். குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான போதுமான ஆதாரம் உள்ளதால் விசாரணையை இன்னும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker