Latestமலேசியா

‘சிறைப் பறவை’  அன்வார்- இன்று விடுதலையாகி சிறகடித்தார்!

கோலாலம்பூர், மே.16- 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி, 5 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மூத்த அரசியல் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று விடுதலை ஆனார்.

ஓர் அரசியல் ‘சிறைப் பறவை’  இருந்து வந்த அன்வார், இன்று காலை 11.33 மணியளவில்  விட்டு விடுதலையாகி சிறகடித்தது போல உற்சாகத்துடன்  வெளியேறினார்.

நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் மற்றும்  ஆதரவாளர்கள்  சுற்றிச் சூழ்ந்திருக்க, பலத்த பாதுகாப்புடன் வெளியேறி கையசைத்தார் அன்வார்.

பின்னர் அங்கு தயாராக இருந்த காரில் ஏறினார். அவருடைய கார் மாமன்னரின் அரண்மனையான இஸ்தானா நெகாராவை நோக்கிப் பறந்தது.

அரச பொதுமன்னிப்பைப் பெற்று விடுதலை ஆகியிருக்கும் அவர், மாமன்னரைச் சந்தித்து தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker