Latestமலேசியா

சிலாங்கூர் தண்ணீர் சேவை மறுசீரமைப்பு! -அஸ்மின்

ஷா ஆலாம்,மே.16- சிலாங்கூரின் நீரின் மறுசீரமைப்புத் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

இதை பற்றிய உத்தேசத் திட்டம் தங்கள் நிர்வாகத்தின் முக்கிய பணியாக அமையும். சிலாங்கூரின் தன்னீர் வினியோகத்தை மறுசீரமைப்பு செய்யும் முன்னர், மாநில அரசாங்கம் புத்ராஜெயாவின் அனுமதியை பெற வேண்டும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், விடுதலைக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் மூத்த தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் பிரதமராவதற்காக நடத்தப்படும் இடைத்தேர்தல் குறித்து வினவுகையில், மத்திய அரசின் நிர்வாகத்திற்கு முன்னுரிமைக்கு விடப்படும் என அவர் பதிலளித்தார்.

அதோடு, நாட்டை வழிநடத்துவதற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கும், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுக்கும் உறுதுணையாக இருக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker