Latestஉலகம்

டிரம்ப்- கிம் ஜோங் யுன் சந்திப்பில் திடீர்ச் சிக்கல்!  

அமெரிக்கா – தென்கொரியா இணைந்து நடத்திய இராணுவப் பயிற்சி காரணமாக இன்று நடைபெறவிருந்த உயர் மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.

அமெரிக்கா -தென் கொரியா இணைந்து நடத்தி வரும இராணுவப் பயிற்சி மேலும் தொடர்ந்தால் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் இருந்து வடகொரியா விலக நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக படிப்படியாக அண்டை நாடுகளுடன் நல்லிணக்கம் பேண வடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது வடகொரியாவின் இந்த முடிவு, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவுக்குள் ஊடுருவும் திட்டமே, தென் கொரியா மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கூட்டுப்பயிற்சியின் முக்கிய நோக்கம் எனக் கருதுவதாக வடகொரியாவின் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இதனால் சிங்கப்பூரில் கிம் ஜோங் யுன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின் பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பது சந்தேகமே என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எல்லைச் சாவடியான பாம்முஞ்ச் ஜோம்  கிராமத்தில் புதன்கிழமை வட மற்றும் தென் கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பேச்சு வார்த்தையின் போது கொரியப் போரை அதிகாரப்பூர்வமாகவும் முறைப்படியும் முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் கொரிய தீபகற்ப பகுதியில் அணுவாயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தென் கொரியாவுடன் இன்று நடைபெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட இராணுவப் பயிற்சி, வடகொரியாவுடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker