Latestசினிமா

தண்ணி’ அடிக்க மாட்டேன் என்று 14 வயதிலேயே  வாக்குறுதி தந்த டிடி

சென்னை, மே.16-  பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி பற்றி  தெரியாத சில விஷயங்கள் அவராகவே தெளிவுப்படுத்தியுள்ளார்

டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்ற திஷ்யதர்ஷினி. தனக்கென்று இவர் தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பின் விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். கடந்த 2017ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட தமிழ் தொலைக்காட்சி பெண் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை டைம்ஸ். இந்தப் பட்டியலில் டிடிக்கு தான் முதல் இடம் கிடைத்துள்ளது

அதிகம் விரும்பப்பட்ட தொலைக்காட்சி பிரபலமாக தேர்வு செய்யப்பட்டதில் டிடி மகிழ்ச்சியில் உள்ளார். மக்களுக்கு என்னைப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் விரும்பப்பட்டவளாக இருப்பது தெரியாது என்கிறார் டிடி.

கேமராவுக்கு முன் வந்து நிற்க தற்போதும் நான் பயப்படுகிறேன். புதுப்படம் அல்லது நிகழ்ச்சியின் ஷூட்டிங் துவங்கும்  முன்  பயத்தில் நான் வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது என டிடி தெரிவித்துள்ளார்.

எனக்கு தனியாக சாலையைக் கடந்து செல்லத் தெரியாது. எனக்கு சைக்கிள் மட்டுமே ஓட்டத் தெரியும். ஸ்கூட்டரோகாரோ ஓட்டத் தெரியாது. கற்கவும் முயற்சி செய்யவில்லை என்று டிடி கூறியுள்ளார்.

எனக்கு 13-14 இருக்கும் போது மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ மாட்டேன் என்று என் தந்தைக்கு வாக்குறுதி அளித்தேன். அதனால் தற்போது வரை அதை நான் செய்தது இல்லை. மது அருந்துவோரின் அருகில் இருந்தாலும் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றியது இல்லை என்கிறார் டிடி

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker