Latestமலேசியா

நஜிப்பை வீழ்த்திய அந்த 3 நாள்!

கோலாலம்பூர், மே.16- 14-ஆவது பொதுத் தேர்தல் காலக் கட்டத்தின் இறுதி மூன்று நாட்களில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாக, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிப் பெற்றதாக மெர்டேக்கா செண்டர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று தின்ங்களில், தேசிய முன்னணிக்கு மட்டுமே இதுநாள் வரை வாக்களித்து வந்த மக்கள், தங்களின் ஆதரவை பக்காத்தான் ஹராப்பான் அல்லது பாஸ் கட்சிக்கு வழங்க முடிவெடுத்தனர் என்று மெர்டேக்கா செண்டர் நிர்வாக இயக்குநரான இப்ராஹிம் சுஃபியான் கூறினார்.

தேர்தல் வாரத்தின் திங்கட்கிழமையன்று நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் போதுதான் மக்கள், தேசிய முன்னணியின் (முன்னாள்) தலைவரின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொண்டனர் என்று அந்த ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவரான துன் மகாதீர் முகமட்டின் பேச்சை இந்த மூன்று நாட்களில் மக்கள் கூர்ந்து கவனித்தனர். அதுமட்டுமல்லாது, துன் டாயிம் ஸைனுடின், டான்ஶ்ரீ ரபீடா அஸீஸ், டான்ஶ்ரீ ரயீஸ் யாத்தீம் மற்றும் டான்ஶ்ரீ ஷேட் ஹமீட் அல்பார் ஆகியோர் பக்காத்தானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த்தையும் மக்கள் கவனிக்க தவறவில்லை.

“தங்களை பிரதிநிதிக்கும் தலைவர் யாராக இருந்தால் தங்களுக்கு நன்மை கிட்டும் என்று மக்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர். மகாதீரின் முன்னாள் அமைச்சர்கள் இதுவரை அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, மக்கள் மகாதீரை நம்பலாம் என்று முடிவெடுத்து விட்டனர்” என்று இப்ராஹிம் சுஃபியான் சொன்னார்.

“மகாதீர் மீது மக்கள் கொண்ட அபிமானத்தால், பக்காத்தான் கூட்டணிக்கு, அந்த இறுதி மூன்று நாட்களில் 11 விழுக்காடு ஆதரவு கூடியது” என்றார் அவர்.
மலாய் வாக்காளர்கள் பலர், நஜிப் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரத்தில் அவரின் நிலைப்பாடு குறித்தும் மக்கள் மனதில் கேள்வி எழுந்தது என்று இப்ராஹிம் கருத்து தெரிவித்தார். மேலும், பொருள், சேவை வரியால் மக்கள் பாதிப்படைந்து, அதனால் நஜிப் மீது ஆத்திரம் கொண்டனர் என்றும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker