Latestமலேசியா

நில விவகாரம்: லோகபாலா மீதும் விசாரணையா?

கோலாலம்பூர்,மே.16-கூட்டரசுப் பிரதேசத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் நில ஊழலில், கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சராக இருந்த டத்தோ லோகபாலா மற்றும் கோலாலம்பூர் மேயர் ஆகியோரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கெப்போங் எம்.பி.லிம் லிப் எங் தெரிவித்தார்.

சுமார் 428 கோடி ரிங்கிட் மதிப்புடைய 64 துண்டு நிலங்களின் விற்பனை தொடர்பாக ஊழல் நடந்துள்ளது என்றும் இது குறித்து முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் மீது எம்.ஏ.சி.சி விசாரணை நடத்த வேண்டும் என்று லிம் லிப் எங் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பான புகாரை அவர், இன்று கோலாலம்பூர் கொக்ரெய்னிலுள்ள எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் வழங்கினார். இந்த நில விவகாரத்தில் முன்னாள் துணையமைச்சர் டத்தோ லோகாபாலாவும் விசாரிக்கப்படலாம், கோலாலம்பூர் மேயரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எம்.ஏ.சி.சி.யில் இது குறித்து லிம் புகார் அளித்த போது, சிகாம்புட் எம்.பி.யான ஹென்னா இயோவும் உடனிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker