Latestசினிமா

பிரபுதேவாவுடன் திருமணமா? -நடிகை நிகிஷா

ஹைதரபாத். மே.16- பிரபுதேவாவை திருமணம் செய்வது குறித்து நடிகை நிகிஷா  விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர்- இங்கிலாந்தைச் சேர்ந்த நிகிஷா பட்டேல். தலைவன், என்னமோ ஏதோ, 7 நாட்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில், பிரபுதேவா பற்றி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பிரபுதேவாவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்களா?’ என்று பேட்டி ஒன்றில் நிகிஷாவிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவரோ,” நீங்கள் படத்தைப் பற்றி கேட்கிறீர்கள், நானோ, பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்றார்.

“என்னாது அந்த நடிகை பிரபுதேவாவை கல்யாணம் செய்து கொண்டு விட்டா ரோ,அதனால் தான் அப்படி பேட்டி கொடுத்தாரா?’ என்று ஆளாளுக்கு பேசத் துவங்கி விட்டனர். பலரும் தன்னப் பற்றி பேசுவதை பார்த்து நிகிஷா பட்டேல் சங்கடம் அடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் பிரபுதேவாவுடனான திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பத்திரிகையாளர்களிடமிருந்து அழைப்புகளால் சங்கடமாகி விட்டேன். இந்தச் செய்தி தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. பிரபுதேவா நண்பர் தான் என்று விளக்கம் அளித்துள்ளார் நிகிஷா.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker