Latestமலேசியா

மஇகா மீதான எல்லா புகார்களையும் விசாரியுங்கள்! -சிவராஜ்

கோலாலம்பூர், மே.16- மஇகா தூய்மையான, நம்பத் தகுந்த ஒரு கட்சியாக திகழ வேண்டுமானால், அதன் மீதான புகார்கள் விசாரிக்கப்பட வேண்டும் என கேமரன் மலை எம்.பி யான டத்தோ சிவராஜ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“எங்களின் கட்சி மீதான புகார்களும் ஊழல் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும்” என்று தம்முடைய முகநூலில் டத்தோ சிவராஜ் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

எல்லா ஊழல் புகார்களும் விசாரிக்கப்படவேண்டும் அதில் சம்பந்தப்பட்ட எல்லாதரப்பும் விசாரிக்கப்படவேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் மட்டுமே எங்களைப் போன்ற இளம் தலைமுறைத் தலைவர்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், தாக்கங்களில் இருந்து விடுபட முடியும் என்று மஇகா இளைஞர் பிரிவின் தலைவருமான சிவராஜ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker