Latestமலேசியா

மலாக்கா ஆட்சிக் குழுவில் ஜி.சாமிநாதன்!

மலாக்கா, மே 16 – மலாக்கா மாநிலத்தில் யாங்டி பெர்த்துவா நெகிரி காலில் யாக்கோப் முன்னிலையில் காடெக் தொகுதி உறுப்பினர் ஜி. சாமிநாதன் உள்பட 10 பேர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர்.

இவர்களில் ஐந்து ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஐசெகவை சேர்ந்தவர்கள், பி.கே.ஆர் மற்றும் பிரிபூமி பெர்சத்து கட்சியைச் சேர்ந்த தலா இருவர் பதவியேற்றனர். அமானா நெகாரா சார்பில் ஒருவர் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றார்.

ஐ.செ.க சார்பில் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றவர்களில் மலாக்கா மாநில ஐசெக உதவித் தலைவரான சாமிநாதனும் ஒருவராவர். இவர் காடெக் தொகுதியில் போட்டியிட்டு டத்தோ பன்னீர் செல்வத்தை வென்றவராவர்.

மலாக்காவில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் 15 இடங்களை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியினர் வென்றனர்.

புக்கிட் கடில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான அட்லி ஷஹாரி கடந்த புதன்கிழமை, மலாக்காவின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவராகவும் மலாக்கா மாநில அமானா நெகாரா தலைவராகவும் இருந்து வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker