Latestமலேசியா

ரோஸ்மாவிடம் ‘பிங்க்’ வைரமா? வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர், மே.16- டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரின் கையிருப்பில் உள்ள 22 கேரட் ‘பிங்க்’ நிற வைரம் மீட்கப்பட வேண்டும். அவ்விவகாரம் தொடர்பில் லாவ் தெக் லோ அல்லது ஜே லோ என்றழைக்கப்படும் தொழிலதிபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற 1எம்டிபி விமர்சகரான கைரூடின் அபு ஹசான் தொடுத்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த பிங்க் வைரம் தொடர்பில் ஜே லோவிடம் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று கூறி, உயர் நீதிமன்றம் நீதிபதி அகமட் ஸைடி இப்ராஹிம், அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதனிடையில், கைரூடின் தொடுத்த வழக்கை எதிர்த்து, ஜே லோ, ரோஸ்மா மற்றும் 1எம்டிபி நிறுவனம் கொடுத்த வழக்கு, நாளை விசாரணைக்கு வரும்.

இதற்கு முன்பு, மெசிர் இங் ஐக் குவான் என்ற சட்ட நிறுவனத்தை தனக்காக வாதாட ஜே லோ நியமித்தாரா? என்பது தொடர்பில், ஜே லோ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கைரூடின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 27.3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக் கொண்ட அந்த ‘பிங்க்’ வைரத்தை ரோஸ்மா 1எம்டிபி நிறுவனத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அம்னோ பத்து காவான் தொகுதித் துணைத் தலைவரான கைரூடின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம், நியூயார்க்கில் உள்ள நகைக் கடை ஒன்றில், தனது ஏஜெண்டு டான் கிம் லூங்கின் உதவியுடன், ஜே லோ அந்த பிங்க் வைரத்தை வாங்கினார் என்று கைரூடின் தெரிவித்தா

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker