Latestமலேசியா

1எம்டிபி; மலேசியாவுடன் சுவிட்சர்லாந்து பேச்சு!

ஜூரிச், மே.16- 1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரம் தொடர்பிலான விசாரணையை எவ்வாறு வழிநடத்துவது என்பது குறித்து மலேசிய அரசு தரப்பு வழக்கறிஞர்களுடன் சுவிட்சர்லாந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக அந்நாட்டு சட்டத்துறை தலைவர் தெரிவித்தார்.

“மலேசியாவில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைத் தொடர்ந்து, 1எம்டிபி நிதி முறைக்கேடு தொடர்பிலான விசாரணை எந்த வகையில் நடத்தப்படும் என்பது குறித்து அறிந்துக் கொள்ள, சுவிட்சர்லாந்து வழக்கறிஞர்கள், மலேசிய அரசு தரப்பு வழக்கறிஞர்களை சந்திக்கவிருக்கின்றனர்.

“இரு தரப்பினரிடையே புரிந்துணர்வு இருக்கும் பொருட்டு, இந்த சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இந்தச் சந்திப்பானது மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் சொன்னார்.

கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற 14-ஆவது தேர்தலில், எதிர்க்கட்சியான பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் மகாதீர் முகமட், மலேசியாவின் 7-ஆவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 1எம்டிபி நிதி முறைக்கேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாதீர் கூறினார்.

1எம்டிபியிலிருந்து சுமார் அமெரிக்க டாலர் 4.5 பில்லியன் தொகை ‘களவாட’ பட்டது தொடர்பில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உட்பட ஆறு நாடுகள் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker