Latestமலேசியா

‘1எம்டிபி முறைகேடு: வருத்தமே படாத கைரி!’ – கிட் சியாங் 

கோலாலம்பூர், மே.16- அம்னோ தலைமைத்துவம் மீது உறுப்பினர்கள் கொண்ட அதிருப்தி குறித்து டத்தோஶ்ரீ நஜிப்பிடம் தாம் தகவல் தெரிவிக்காமல் போனது குறித்து அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுடின் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், கைரியின் வருத்தம் காலம் கடந்து வந்துள்ளதாக ஜசெக மூத்த தலைவரான லிம் கிட் சியாங் கூறினார்.

அதுமட்டுமல்லாது, தன் கண் முன்னே நிகழ்ந்த 1எம்டிபி நிதி முறைகேடு குறித்து அந்த முன்னாள் அமைச்சர் கைரி, இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பதையும் கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

“உலக நாடுகளின் முன்னிலையில் மலேசியாவிற்கு களங்கம் ஏற்படுத்திய இந்த 1எம்டிபி விவகாரம் குறித்து, கைரியோ அல்லது தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளோ, அல்லது அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை. அந்த ஊழல் குறித்து அவர்களுக்கு எவ்வித மன வருத்தமும் இல்லையா?” என்று கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.

இதனிடையில், தேசிய முன்னணி கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வந்த விதம் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது என்பதை கூட்டணித் தலைவர்கள் அறியவில்லை. இம்முறையும், எப்போதும் போல அக்கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற மமதையில் அவர்கள் திளைத்திருந்தனர் என்று கைரி பேட்டி ஒன்றில் சுட்டிக் காட்டி இருந்தார்.

1எம்டிபி ஊழல் தொடர்பில் முன்னாள் அம்னோ துணைத் தலைவரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான டான்ஶ்ரீ முகைதீன் யாசின் கேள்வி எழுப்பியதால், அவரின் பதவி பறிக்கப் பட்ட போதும், அம்னோ உறுப்பினர்களோ அல்லது தேசிய முன்னணி கூட்டணி கட்சி தலைவர்களோ அது குறித்து நஜிப்பிடம் எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை என்பதையும் கைரி அப்பேட்டியின் போது ஒப்புக் கொண்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker