Latestஉலகம்

3 மில்லியன் மக்கள் அந்தரங்கம் அம்பலம்! சிக்கலில் பேஸ்புக்!

நியூயார்க், மே. 16- ‘மை பெர்செனலிட்டி‘ “my personality” என்னும் அப்ளிகேஷனை பயன்படுத்திய மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் ஆன்லைனில் எளிதில் யாருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பாதுகாப்பற்ற நிலையில் நான்கு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கேம்பிரெட்ஜ் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலிருந்தமை பெர்செனெலிட்டிஅப், என்பது பயனர்களுக்கு மனோவியல் பரிசோதனைகளை நடத்தி உடனடியாக முடிவுகளை அறிவிக்கும் ஒரு தளமாகும்

மனிதர்களின் பயம், மனசாட்சி,வெளிப்படைத்தன்மை, அனுபவங்களை எதிர்கொள்ளும் தன்மை மற்றும் ஒப்புக் கொள்ளும் தன்மை ஆகிய ஐந்து அந்தரங்க குணங்களை வெளிப்படுத்தும் கேள்விகள் இச்சோதனையில் கேட்கப்படும்

தற்போது ஏற்பட்டுள்ள தகவல் கசிவினால் 3.1 மில்லியன் பயனர்களின் மிக அந்தரங்க தகவல்களான மனநலம் குறித்த இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் நிலைமை ஏற்படுத்தியுள்ளது.

இத்தேர்வில் பங்கு பெற்ற பின் ஒவ்வொரு பயனருக்கும் ஒரு பிரத்தியேக .டி கொடுக்கப்படும்.

இந்த ஐடி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சைக்கோமெட்ரிக் மையத்தில் இத்தகவல்களை காக்கும் பொறுப்பிலுள்ள டேவில் ஸ்டில் வெல் மற்றும் மைக்கல் கோசின்கி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆனால் இத்தகவல்களை அணுகும் பாஸ்வேல்ட் முதலானவை கிட்ஹாப் என்னும் இணையத் தளத்திலேயே கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் தகவல்களை சென்றடைய முடியும் இவ்வளவு பெரிய பிரச்சினை வெளியானதும் சுதாரித்துக் கொண்ட பேஸ்புக் ஏப்ரலிலேயேமை பெர்செனெலிட்டி அப்ளிகேஷனைஇடை நிறுத்தம் செய்து விட்டதாக கூறியுள்ளது.

தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறியுள்ள பேஸ்புக் விசாரணை முடிவுகளைப் பொருத்து “my personality app” நிரந்தரமாக அகற்றக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

கேம்பிரெட்ஜ் அனாலிட்டிகா பிரச்சனையைத் தொடர்ந்து சுமார் 200 அப்ளிகேஷன்களை இடைநிறுத்தம் செய்து விட்டதாக அறிவித்த சில மணி நேரத்தில் இந்த தகவல் கசிந்த விஷயம் வெளியாகி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker