Latestமலேசியா

623 பாலியல் குற்றச்சாட்டுகள்: தந்தை மீதான வழக்கு மறுபரிசீலனை!

கோலாலம்பூர், மே.16- தனது சொந்த மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய 623 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட கொடூரத் தந்தை மீதான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவிருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கொடூரத் தந்தைக்கு தண்டனை விதிக்கப்பட்டதில் சட்டம் மீறப்பட்டிருக்கலாம், அல்லது சில தவறுகள் நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் அது குறித்து உயர் நீதிமன்றம் மறுபரீசிலனை செய்யவிருக்கிறது.

அந்த ஆசாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சில, ஒரே வகையில் அமைந்திருந்ததாக, அவரின் வழக்கறிஞர் சைரஸ் தியூ ஃபூ வொய் கூறினார்.

அதுமட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த ஆசாமி ஒப்புக் கொண்ட போது, அவர் தரப்பில் வாதாட வழக்கறிஞர் யாரும் இல்லை என்பதையும் சைரஸ் சுட்டிக் காட்டினார்.

ஜூன் மாதம் 1-ஆம் தேதியன்று, இந்தக் கொடூரத் தந்தை வழக்கு, மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி அஸ்மான் அப்துல்லா தெரிவித்தார்.

தனது சொந்த மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக அந்த ஆசாமி மீது 623 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம், ஷெஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி யொங் ஸரீடா அந்த ஆசாமிக்கு 48 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 24 பிரம்படிகளை விதித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker