Latestமலேசியா

அமெரிக்கா மீது வட கொரியா பாய்ச்சல்; டிரம்ப் -கிம் ஜோங் சந்திப்பு ரத்தா?

பியோங்பாங் மே.17- அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட அமெரிக்க வலியுறுத்தினால் பேச்சு வார்த்தை ரத்தாகும். அமெரிக்காவுடன் எத்தகைய பொருளாதார உறவு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று மிரட்டியுள்ளது வடகொரியா.

இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்த மாட்டோம் என்றும் அறிவித்த அவர், கடந்த மாதம் தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் உடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த கிம் முடிவு செய்தார். இச்சந்திப்பு ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் கொரியாவில் நடைபெறவிருந்த அமெரிக்கா- தென்கொரியா இராணுவ ஒத்திகை வடகொரியாவை ஆத்திரம் அடையச்
செய்துள்ளது. இதனால் நேற்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்டஈராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சு வார்த்தை ரத்தாகியது.

மேலும் அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட அமெரிக்க வலியுறுத்தினால், சிங்கப்பூரில் ஜூன் 12 -இல் நடக்க உள்ள டிரம்ப்-
கிம் ஜோங் இடையிலான பேச்சு வார்த்தை ரத்தாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது.

அணு ஆயுத திட்டங்களை வகை விட்டால் அமெரிக்கா உரிய இழப்பீடு கொடுக்க முன் வந்திருப்பதை ஏற்க மாட்டோம் எங்களது பொருளாதார மேம்பாட்டிற்கு அமெரிக்காவின் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை என வடகொரியா கூறியுள்ளது. இத்தகவலை வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker