Latestமலேசியா

அமைச்சர்களை உடனே நியமிப்பீர்! அம்னோ கோரிக்கை

கோலாலம்பூர்,மே.17-அமைச்சரவைக்கான நியமனங்கள் குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் டஹ்லான் வலியுறுத்தினார்.

14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து ஒரு வாரமாகியும் பக்காத்தான் அரசாங்கத்தின் அமைச்சரவை முழுமையாக நியமிக்கப்படாத நிலையில், இதர 7 அமைச்சுக்களுக்கான அமைச்சர்களின் அறிவிப்பிற்காக மக்கள் பீதியுடனும் கலக்கத்துடனும் காத்துக் கொண்டிருப்பதாக டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் டஹ்லான் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பல கொள்கைகளும் திட்டங்களும் அமைச்சர்களால் அறிவிக்கப் படவில்லை எனவும் இது அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு எதிரானது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், ஜ.செ.க.வின் லிம் குவாங் என் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டது மக்களிடையே எதிர்மறை வரவேற்பை பெற்றது, இதற்கு ஓர் எடுத்துக் காட்டு என அவர் சுட்டிக் காட்டினார்.

லிம் குவான் எங்கிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருப்பது மகாதீருக்கு தெரிந்திருந்தும் அவரை நிதியமைச்சராக அறிவித்தார். இது பற்றி மக்களால் கேள்வி எழுப்பப்பட்ட பின்னர் சட்டம் அனுமதித்தால் மட்டுமே லிம் குவான் எங் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள முடியும் என துன் மகாதீர் மாற்றிப் பேசுகிறார் என அப்துல் ரஹ்மான் கூறினார்.

அமைச்சரவை உறுப்பினர்களின் நியமனம் அரசியலமைப்பு மற்றும் ஆட்சியாளர்களின் மன்றத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் ஒழுக்கம் இல்லாத அமைச்சரவை நியமனம் நம் நாட்டின் ஒருமைப்பாட்டையும் மரியாதையும் சீர்குலைக்கும் வகையில் அமைய நேரிடும் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker