Latestமலேசியா

அமைச்சர் பதவிக்கு அலைவதா? -சாடினார் அன்வார்!

கோலாலம்பூர், மே.17- புதிய பக்காத்தான் அரசாங்கத்தின் அமைச்சர் பதவிக்காக அலையும் சிலரை பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவரான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.

“உடனடியாக அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலில் தங்களின் முகங்களை கண்ணாடிகளில் பார்க்க வேண்டும். பக்காத்தான் கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர். அதற்கு நாம் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அவர்களின் வேலையை சரிவர செய்ய வேண்டும். பலர் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று வரிசையில் நின்றுக் கொண்டி இருக்கின்றனர். முதலில் வேலையை பாருங்கள்” என்று அவர் பேசினார்.

அதுமட்டுமல்லாது, கடந்த 61 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஆட்சி நடத்தியது போல, பக்காத்தான் ஆட்சி இருந்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் சேவையாற்ற வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.

“நாட்டின் சொத்து, மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாம் செயல் பட வேண்டும். நல்லாட்சியை நாம் மக்களுக்கு வழங்க வேண்டும்” என்று அவர் சொன்னார்.

தேர்தலில் வெற்றிப் பெற்று விட்டோம் என்ற மமதையில் பக்காத்தான் அரசாங்கம் செயல்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் புதிய சொத்துகளை வாங்கினாலோ, அல்லது மீண்டும் திருமணம் புரிந்துக் கொண்டாலோ, அவர்களை தாம் கண்டிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker