Latestமலேசியா

ஆங்கில மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை! -சங்கம் தகவல்

கோலாலம்பூர், மே.17- நாட்டிலுள்ள பள்ளிகளில், ஆங்கில மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கையை, புதிதாக ஆட்சி அமைத்துள்ள மத்திய அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் ஆங்கில் மொழியை போதிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிகழ்வதாக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஹர்ரி டான் தெரிவித்தார். கிளந்தான் மாநிலத்தில் மட்டும், ஆங்கில மொழியை போதிக்க மேலும் 500 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்த நிலைமை தொடர்ந்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். நாட்டிலுள்ள அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் 5 மில்லியன் மாணவர்களுக்கு ஆங்கில மொழியை போதிக்க 450,000 ஆசிரியர்கள் தான் உள்ளனர் என்று அவர் விளக்கினார்.

உலகளாவிய நிலையில், ஆங்கில மொழிக்கு அத்தியாவசியம் வழங்கப்படுவதாகவும், மாணவர்களின் ஆங்கிலத் திறனை அதிகரிக்க, ஆங்கில மொழி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

ஆங்கில மொழி ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக (முன்னாள்) கல்வி அமைச்சு வகுத்த திட்டங்களை, புதிய அரசாங்கம் தொடர வேண்டும் என்று ஹர்ரி டான் கேட்டுக் கொண்டார்.

ஆங்கில மொழித் திறன் குறித்து 80 நாடுகளில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதில் மலேசியா 13-ஆவது இடத்தில் பட்டியலிடப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மலேசியர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த, ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker