Latestமலேசியா

இந்திய சமுதாய நலனைக் காக்க சிறப்புப் பணிப் பிரிவு!

கோலாலம்பூர்,மே.17- இந்திய சமுதாயத்தின் நலன்களைப் பாதுகாக்க சிறப்புப் பணிப் பிரிவு உருவாக்கப்படும் என்று பிரதமர் டாக்டர் துன் மகாதீர் அறிவித்தார்.

இந்தப் பணிப் பிரிவு, பெண்கள்,இளைஞர்கள் மற்றும் பூர்வக் குடியினர் ஆகியோரின் நலன்களையும் உள்ளடக்கிச் செயல்படும் என்றார் அவர்.

இந்தப் பணிப் பிரிவு, மலேசியாவிலுள்ள சிறுபான்மை மக்களின் பிரச்னையில் அதிக கவனம் செலுத்தும். இதில் இந்திய சமுதாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

இதில் மிக முக்கிய விஷயம், இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் நாம் கவனம் செலுத்துவதுதான் என்று அவர் சொன்னார். இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

 

 

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker