Latestஉலகம்

இளவரசி மேகன் மெர்க்கல் முதல் கணவரை பிரிந்தது ஏன்?

லண்டன், மே.17- பிரிட்டனின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் தனது முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்து பல விஷயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.

இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கல் இன்னும் இரு தினங்களில் ( மே-19) திருமணம் செய்து கொள்ள உள்ளனர். மேகன் மெர்க்கலுக்கு இது இரண்டாம் திருமணமாகும். ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளரான டிரிவோர் எங்கில்சன் (வயது 41) என்பவரை கடந்த 2011இல் மணந்து பின் 2013 இல் அவரை விவாகாரத்து செய்து விட்டார்.

மெர்க்கல்-எங்கில்சனை விவாகாரத்து செய்ததற்கான காரணங்கள் குறித்து அவரின் பழைய நண்பர்களும் எங்கில்சனின் குடும்ப உறுப்பினர்களும் பேசியுள்ளனர்.

மெர்க்கலின் சிறு வயது தோழி நினாகி பிரிடி கூறுகையில், ‘சூட்ஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபல நடிகையான மெர்க்கல்
பின் அவர் புகழுக்கு அடிமையாகிவிட்டார்.

முற்றிலும் மாறி போன அவர் கணவரை விட்டு விலகத் தொடங்கினார். மெர்க்கல் புகழ் அடைவதற்கு முன்னர் மற்றும் புகழ் கிடைத்த பின்னர் என இரு வகையாக பிரிக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் திருமணமான 23 மாதத்தில் கணவர் எங்கில்சன் அணிவித்த திருமண மோதிரத்தை அவருக்கே தபாலில் மெர்க்கல் திரும்ப அனுப்பினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker