Latestஇந்தியா

கர்நாடக முதல்வரானார் எடியூரப்பா! காங். போர்க்கொடி!

பெங்களூரு, மே.17- கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவியேற்றார். அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசத்தை ஆளுநர் வஜூபாய் வாலா அளித்துள்ளார்.

இதையடுத்து கர்நாடக அரசியலில் கடந்த 24 மணி நேரம் நீடித்து வந்த அடுத்த முதல்வர் யார் என்கிற பரபரப்புக்கு முடிவு வந்துள்ளது. ஆட்சி அமைக்க பாஜக மற்றும் மஜத- காங்கிரஸ் கூட்டணி என இரு தரப்பும் உரிமை கோரியிருந்த நிலையில் 104 எம்எல்ஏக்கள் வைத்துள்ள பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எடியூரப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 5 ஆண்டு இடைவெளிக்குப் பின் கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது.

பெரும்பான்மைக்கு 112 எம்எல்ஏ.க்கள் தேவை என்ற நிலையில் ஆளுநர் அளித்துள்ள 15 நாள் அவகாசத்துக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

பாஜகவிடம் உள்ள 104 எம்எல்ஏ.க்கள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ ஒருவருடன் சேர்த்து தற்போது 105 எம்எல்ஏ.க்கள் கைவசம் உள்ளனர். சட்டப் பேரவையில் அவர்களுக்கு மேலும் 7 எம்எல்ஏ.க்களின் ஆதரவு தேவை. எனவே இந்த கூடுதல் ஆதரவை பாஜக எப்படி பெற இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே வேளை, காங்கிரஸ் – மஜத கூட்டணிக்கு 116 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாகக் கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தும், பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

இதனால் எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது காங்கிரஸ் தலைவர் சீத்தாராமையா தலைமையில் ஆதரவு எம் எல் ஏக்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker