Latestசினிமா

கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் கடவுள் போட்ட திட்டம்!

மும்பை, மே.17- கவர்ச்சிப் படங்களில் நடித்து இணையத் தளங்களில் மிக பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இப்போது கவர்ச்சிப் பாணியை மாற்றிக் கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தியதோடு மூன்று குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார்.

இந்தியில் கவர்ச்சி வேடங்களை ஏற்று நடித்தவர் தமிழில் “வடகறி” படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது “வீரமாதேவி” என்ற படத்தில் போர்வீராங்கனையாக நடிக்கிறார்.

கவர்ச்சி பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணமும் ஆகிவிட்டது. ஆனாலும் குழந்தை பெறாமல் இருந்தார் சன்னி லியோன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திடீரென அம்மாவாக வேண்டும் என்ற ஆசை வந்தது. குழந்தைப் பெற்றுக் கொண்டால் பட வாய்ப்புகள் பறி போய்விடும் என்று எண்ணியவர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து நிஷா என்ற ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தார்.

பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் இரட்டைக் குழந்தைகளை தத்தெடுத்தார். அவர்களுக்கு இப்போது அஹ்ஹர், நோஹா, என பெயரிட்டுள்ளார்.
தற்போது கணவன் – மனைவி 3 குழந்தைகள் என சன்னி குடும்பம் பெரிதாகிவிட்டது. இந்த சூழலை அவர் மிகவும் நேசிக்கிறார்.

வெளியூர் பயணமென்றால் கையோடு மூன்று குழந்தைகளையும் அழைத்துச் செல்கிறார்.அணமையில் வெளியூர் சென்று திரும்பிய சன்னி, விமான நிலையத்தில் 3 குழந்தைகளுடன் வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. சன்னி ஒரு குழந்தையையும், கணவர் டேனியல் வெபர் மற்றொரு குழந்தையையும், 3ஆவது குழந்தையை பணியாள் ஒருவரும் தூக்கி வந்த காட்சிகள் இணையத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இது பற்றி சன்னி கூறும் போது,” நானோ, என் கணவரோ இப்படியொரு குடும்பம் எங்களுக்கு அமையும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது எல்லாம் கடவுள் போட்ட திட்டம். 3 குழந்தைகள் என்பது அற்புதமான அனுபவம் தற்போது நாங்கள் முழுமையான குடும்பமாக மாறியிருக்கிறோம் என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker