Latestமலேசியா

காதலின் தோல்வி; தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு!

பெட்டாலிங் ஜெயா,மே.17- காதலின் தோல்வியால் மனமுடைந்ததாக கருதப்படும் ஓர் இளம்பெண் இங்குள்ள பண்டார் உத்தாமா தங்கும் விடுதியின் மேல் இருந்து குதித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இன்று அதிகாலை மணி 3 அளவில் நடந்த அச்சம்பவத்தில், ஓர் இளம்பெண் தங்கும் விடுதியின் கூரைப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்ததை பாதுகாவலர் கவனித்துள்ளார்.

தங்களுக்கு அதிகாலை மணி 3.12 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகவும், உடனடியாக ஏழு தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்தனர் எனவும் டாமான்சாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ரம்லி ஹருண் தெரிவித்தார்.

தங்கும் விடுதியின் 24ஆவது மாடியின் கூரையின் விளிம்பில் குதிப்பதுப் போல நின்றுக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணைச் சமாதானம் செய்ய, அவர்கள் அப்பெண்ணின் 19 வயது தோழனின் உதவியை நாடினர்.

சுமார் ஒரு மணி நேரச் சமாதானத்திற்கு பின்னர், மீட்கப்பட்ட அந்த இளம்பெண், பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தன் காதலன் தன்னை கை விட்டு விட்டுச் சென்றதால் அந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதாக நம்பப்படுகிறது எனவும் அதிகாலை மணி 5.52 அளவில் அப்பெண் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டார் எனவும் ரம்லி ஹருண் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker