Latestமலேசியா

ஜிஎஸ்டி தகர்ந்தது: அடுத்து டோல்கள் தகருமா?

கோலாலம்பூர், மே.17- ஜி.எஸ்.டி என்ற பொருள் சேவை வரி ஜூன் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து முற்றாக அகற்றியதைப் போல் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், கூடிய விரைவில் டோல் சாவடிகளை அகற்றும் முயற்சியில் ஈடுபடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஸைனுடின் மற்றும் முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோஶ்ரீ ஸெத்தி அஸீஸ் ஆகிய இருவரும் நேற்று பொருளாதார வல்லுநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய போது, டோல்களை அகற்றும் சாத்தியம் குறித்து கலந்தாலோசித்தனர்.

டோல் சாவடிகள் குறித்த விவரங்கள் பரிசீலனை செய்யப்படும் என்று அந்தப் பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடிப்படை வசதித் திட்டங்கள் குறித்தும் அரசாங்கம் பரிசீலனை செய்யும். சீனாவின் முதலீடுகள் குறித்து அரசாங்கம் பாரபட்சமாக செயல்படாது. இருந்த போதிலும், அந்த முதலீடுகளால் நாட்டிற்கு என்ன நன்மை ஏற்படும், மற்றும் அந்த முதலீடுகளால் அதிக செலவுகள் ஏற்படாமல் இருப்பதை அரசாங்கம் கண்காணிக்கும் என்று அந்தப் பேச்சு வார்த்தையின் போது அறிவிக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அமைத்தால், நாட்டிலுள்ள டோல் சாவடிகள் படிப்படியாக அகற்றப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் கடந்த மாதம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker