Latestமலேசியா

நஜீப் வீடுகளில் விடிய விடிய சோதனை: கைப் பைகள் மீட்பு

கோலாலம்பூர்,மே.17- நேற்று இரவு மணி 10.15 மனிக்கு தொடங்கி அதிகாலை வரையில், ஜாலான் டுத்தாவில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பபின் வீடுகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளின் போது கைப் பைகள் மற்றும் சில பொருள்கள் கைப்பற்றப்பட்டது.

## டத்தோஶ்ரீ நஜிப்பின் வழக்கறிஞர் ஹர்ப்பால் சிங் ,செய்தியாளர்களுக்கு  விளக்கம் அளித்த போது…

பரிசுப் பொருள்கள் என நம்பப்படும் பல பொருள்களைப் போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர் எனத் தெரிய வந்துள்ளது. இது இந்த சோதனையில் பைகள் உட்பட சில தனிப்பட்ட உடமைகளைத் தவிர வீட்டிலிருந்து வேறு எந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என நஜீப்பின் வழக்கறிஞர் டத்தோ ஹர்ப்பால் சிங் இன்று அதிகாலை 4 மணி அளவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நடைபெற்ற திடீர் பரிசோதனைக்கு நஜீப்பின் குடும்பம் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், வீட்டிலுள்ள அனைத்து அறைகளிலும் பரிசோதனை நடத்தப்பட்டதால் சிறிது தாமதமானதாகவும் கூறினார்.

மேலும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சொந்தமான இதர ஐந்து இடங்களிலும் பரிசோதனை நடத்தப்பட்டது என புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் உறுதிப்படுத்தினார்.

அவை தாமான் டூத்தா,ஸ்ரீ பெர்டானா, கோலாலம்பூர் பெவிலியனில் உள்ள இரண்டு இடங்கள் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker