Latestமலேசியா

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

மும்பை, மே.17- புகழ்பெற்ற இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகர் மிதுன்
சக்ரவர்த்தி, இவர் தமிழில் ‘ஆதி’, ‘யாகாவாராயினும் நாகாக்க’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

1970-1980 ஆம் ஆண்டுகளில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த பாலிவுட் நடிகர் இவர். அவரது நடன அசைவுகளுக்காவே அவரது படங்கள் வெற்றிவாகை சூடின. இந்தி ,பெங்காலி போஜ்புரி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு வயது 70 ஆகிறது.

2009 ஆம் ஆண்டு “லெக்பேக்” இந்திப்படத்தில் நடித்த போது ஏற்பட்ட விபத்தில் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. அன்று முதல் அவர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிர சிகிச்சை பெற்றும் நாடு திரும்பினார். நேற்று முன்தினம் தாங்க முடியாத அளவுக்கு முதுகு வலி ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள மருத்தவமனையில் மிதுன் சக்ரவர்த்தி
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

மாதக் கணக்கில் ஓய்வில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருக்கின்றனர். மிதுன் சக்ரவர்த்தி நாடாளுமன்ற மேல்சபை எம்பியாக இருந்தார். முதுகுவலி காரணமாக அப்பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker