Latestமலேசியா

நள்ளிரவில் நஜிப் வீட்டில் சோதனை: நூருல் – காலிட் கண்டனம்!

கோலாலம்பூர், மே.17- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் நள்ளிரவில் போலீஸ் சோதனை மேற்கொள்ளப் பட்டதை பக்காத்தான் அரசியல்வாதிகள் சாடியுள்ளனர்.

“அதிகாலையில், தூங்கும் நேரத்தில் ஒருவரின் வீட்டை சோதனை செய்வது தவறான செயலாகும். நானும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையை கடந்து வந்துள்ளேன் என்றார் அவர்.

சோதனை செய்யுங்கள், விசாரணைக்கு உட்படுத்துங்கள். விவேகத்துடன் செயல்படுங்கள். ஆனால், இவை கொள்கை அடிப்படையில் செயல்படுத்தப் பட வேண்டும்” என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான நூருல் இஸ்ஸா அன்வார் தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒருவரை சோதனை செய்வதில் தவறில்லை. ஆனால், அவரை அவமானப் படுத்தும் வகையில் அச்சோதனை அமையக் கூடாது என்று அமானா நெகாரா கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் காலிட் சமாட் கூறினார்.

“சோதனை செய்து விட்டால், சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்துங்கள். அவரின் வீட்டில் அதிகாலை 4 மணி வரை சோதனை நடவடிக்கை நடத்துவதன் அவசியம் என்ன? என் வீட்டிலும் அதிகாலை 2.30 மணிக்கு சோதனை நடத்தப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker