Latestமலேசியா

பக்காத்தான் ஹராப்பானுக்கு பதிவு கிடைத்தது!

கோலாலம்பூர்,மே.17- பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான பதிவை சங்கங்களின் பதிவகம் வழங்கி விட்டது. இன்று காலை, இந்தப் பதிவுக்கானச் சான்றிதழ், பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதீரிடம் வழங்கப்பட்டது.

உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அல்வி இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பானின் பதிவுச் சான்றிதழை துன் டாக்டர் மகாதீரிடம் வழங்கிய போது பிரிபூமி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன், பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஸிசா, அமானா நெகாரா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker