Latestமலேசியா

பிரதமர் பதவியை நிராகரித்த வான் அஸிஸா!-அன்வார்

பெட்டாலிங் ஜெயா,மே.17-பேரரசர் அளித்த பிரதமராகும் வாய்ப்பினை அவரது துணைவியார் டாக்டர் வான் அஸிஸா நிராகரித்தார் என பக்காத்தான் ஹராப்பான் மூத்த தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

பிரதமர் பதவியை துன் டாக்டர் மகாதீர் முகமட் தான் ஏற்க வேண்டும் என்ற பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் ஒப்பந்தத்திற்கு ஏற்றவாறு வான் அஸிஸா உண்மையாக நடந்துக் கொண்டார். அதனால் தான் அவர் அப்பதவியை நிராகரித்தார் எனவும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

கடந்த பொதுதேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, தனது துணைவியாரும் பிகேஆர் தலைவருமான வான் அஸீசாவை பிரதமராகுமாறு பேரரசர் யாங்டி பெர்த்துவான் அகோங் 5ஆவது முகம்மட் பரிந்துரைத்தார் என அவர் தெரவித்தார்.

இருப்பினும், தாம் அப்பதவியை ஏற்க தயாராக இல்லை எனவும் தனது கணவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமை உடனடியாக விடுதலை செய்யக் கோரியதாகவும் டாக்டர் வான் அஸிஸா பேரரசரைக் கேட்டுக் கொண்டார் என அவர் நேற்று பாடாங் தீமூரில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

மேலும், பேரரசரின் பொதுமன்னிப்பைப் பெற துரிதமாக செயலாற்றிய துன் மகாதீருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 5 ஆண்டுகாலச் சிறைவாசம் அனுபவித்து வந்த அன்வார் இப்ராகிமிற்கு அடுத்த மாதம் ஜூன் 8ஆம் தேதி விடுதலையாக திட்டமிடப்பட்டு இருந்தது.

இருப்பினும் அன்வார் இப்ராகிமிற்கு உடனடியாக முழு மன்னிப்பை வழங்க பேரரசர் ஐந்தாம் முகம்மட் இணக்கம் தெரிவித்ததால் அவர் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker