Latestசினிமா

பிரபல இயக்குனர் தற்கொலை முயற்சி!

மும்பை, மே.17- மும்பையில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜ சிம்ஹா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
தெலுங்கில் அனுஷ்கா நடித்த “ருத்ரமாதேவி” திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் தான் ராஜசிம்ஹா.

அதன் பின்னர் சந்தீப் கிஷன் நடித்த “ஒக்க அம்மாயா தப்ப” எனும் படத்தின் மூலம் இயக்குனரானார். இந்நிலையில் மும்பையில் தங்கியிருந்த அவர், அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெலுங்குத் திரையுலகில் அதிர்ச்சியஇ ஏற்படுத்தியுள்ளது.

தனது துறை சார்ந்த பிரச்சினைகளால் ராஜ சிம்ஹா ஓர் ஆண்டுக்கும் மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker