Latestமலேசியா

‘பிரிம்’  உதவித் தொகை நீடிக்கும்! -மகாதீர்

கோலாலம்பூர்,மே.17- ‘பிரிம்’ உதவித் தொகைத் தொடர்ந்து வழங்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். இருப்பினும், அந்த உதவித் தொகையை தகுதியானவர்கள் மட்டுமே பெறுகின்றனர் என்பதை உறுதி செய்யும் வகையில், ‘பிரிம்’ மறு ஆய்வு செய்யப்படும் என அவர் கூறினார்.

‘பிரிம்’ உதவித் தொகையைத் தொடர்ந்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ‘பிரிம்’ உதவித் தொகையை மக்கள், அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்காக தரப்படும் இலஞ்சமாக கருதக்கூடாது.

மாறாக, ‘பிரிம்’ உதவித் தொகை, சமூக பிரச்சனைகளை களையும் ஒரு முயற்சியின் வடிவமாக அவர்கள் கருத வேண்டும் என துன் மகாதீர் இன்று நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், நேற்றிரவு முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டில் நடந்த திடீர் சோதனைப் பற்றி வினவுகையில் அதைப் பற்றி தனக்கு எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறிய அவர், சோதனையை மேற்கொள்ள அவர்களுக்கு போதிய ஆதாரங்கள் இருந்ததால் அவர்கள் அதனை மேற்கொண்டனர், அது போலீசின் நடைமுறை எனக் கருத்துரைத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker