Latestமலேசியா

அல்தான்துயா கொலை; மறு விசாரணை தேவை! -அன்வார்

கோலாலம்பூர், மே.17- மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும், நாட்டிலிருந்து தப்பித்துச் சென்ற முன்னாள் போலீஸ் அதிகாரியான சைருல் அஸார் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சி ஆலோசகரான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து தெரிவித்தார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு அல்தான் துயா என்ற மாடல் அழகியை கொலை செய்யுமாறு, ‘முக்கிய புள்ளிகள்’ தம்மை உத்தரவிட்டதால், தாம் அந்தப் பெண்ணை கொலைச் செய்ததாக ஆஸ்திரேலிய காவலில் இருக்கும் சைரூல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைச் செய்யப்பட்ட அல்தான்துயா, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் நெருங்கிய உதவியாளரான அப்துல் ரசாக் பகிண்டாவின் காதலியாவார். அக்கொலை வழக்கில் அப்துல் ரசாக்கும் குற்றஞ்சாட்டப் பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

அந்தக் கொலை வழக்கில், சைருல் மற்றும் அஸிலா ஹட்ரீ ஆகிய இருவரும் ‘பலிகடாகவாக’ பயன்படுத்துள்ளனர் என்று, நஜிப்பின் எதிர்க்கட்சியினர் பலர் பல ஆண்டுகளாக கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்தான் துயாவை கொலை செய்யுமாறு தமக்கு ஆணைப் பிறப்பித்தவரை தாம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவிருப்பதாக சைருல் கூறியிருந்தார்.
சைருலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை திருப்திகரமாக இல்லை.

அச்சம்பவம் தொடர்பில் பல குழப்பங்கள் இதுவரை இருந்து வருவதை சுட்டிக் காட்டிய அன்வார், சைருல் மீண்டும் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டு, அச்சம்பவம் குறித்து புதிய விசாரணை தொடங்கப் பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய நாளிதழுக்க்கு அளித்த பேட்டி ஒன்றில்தான்வார் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker