Latestசினிமா

1எம்டிபி: உல்லாசக் கப்பல் மீதான அமெரிக்க தீர்ப்புக்கு எதிர்ப்பு!

கோலாலம்பூர், மே.17-1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ‘இக்குனாமிட்டி’ என்ற உல்லாசக் கப்பலை அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அநீதியானது என்று அப்படகின் அதிகாரப் பூர்வ உரிமையாளரான ‘இக்குனாமிட்டி’ லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.

“அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் (எப்.பி.ஐ) உத்தரவின் பேரில் இந்தோனிசியக் காவல் துறையினர் அந்த உல்லாச படகை கைப்பற்றியது தவறு என்ற ஜகர்த்தாவிலுள்ள வட்டார நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லத்தக்கது அல்ல என்று அறிவித்து, கலிபோர்னிய நீதிமன்றம் இந்தப் புதிய தீர்ப்பை வழங்கி இருப்பது. இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்” என்று அது கூறியது.

“அந்தப் படகை கைப்பற்றிய அதிகாரிகள் சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்பற்றவில்லை. அதனால் அதன் கைப்பற்றுதல் செல்லாது என்று இந்தோனிசிய நீதிமன்றம் தெளிவாக தனது தீர்ப்பின் போது தெரிவித்தது.

ஆனால், இதை எதையும் கருத்தில் கொள்ளாமல், கலிபோர்னிய நீதிமன்றம், இப்புதிய தீர்ப்பை விதித்துள்ளது” என்று ‘இக்குனாமிட்டி’ லிமிட்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இத்தீர்ப்பினால் அந்நிறுவனம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ள போதிலும், இதனை தாங்கள் எதிர்பார்த்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. கலிபோர்னிய நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை எதிர்த்து ‘இக்குனாமிட்டி’ லிமிடெட் நிறுவனம் மேல் முறையீடு செய்யும் என்றும் அவ்வறிக்கை விவரித்துள்ளது.

‘இக்குனாமிட்டி’ உல்லாச படகானது, 1 எம்டிபி விவகாரத்தின் மையப் புள்ளியாகத் திகழும் ஜோ லோவுக்கு உரிமையானது என நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker