Latestஉலகம்

30 ஆயிரம் அடி உயரத்தில் விமானி அறையின் சன்னல் கழன்று போனது!

பெய்ஜிங், மே.17- விமானம் ஒன்று 30,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது அதன் ஜன்னல் திறந்ததால் ஏற்படவிருந்த மிகப்பெரிய விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

சீனாவின், சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சாங் குய்ங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு 128 பயணிகளுடன் புறப்பட்டது.

விமானம் 30,000 ஆடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது விமானிகள் அறையில், துணை விமானி இருக்கையின் அருகே ஜன்னல் பாதி அளவு திறந்தது.
அப்போது விமானம் மணிக்கு 800 முதல் 900 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்தது காற்றழுத்தத்தை தடுத்து நிறுத்தும் கருவி வெடித்தது. அதோடு துணை விமானியும் காற்றின் வேகத்தில் தூக்கி எறியப்பட்டார்.

உடனடியாக, விமானி விமானத்தை சிசுயான் மாநிலத்தில் உள்ள செங்கு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் விமானத்தை விமானி சாதுர்யமாக தரையிறக்கியதால் பாராட்டப்பட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker