Latestசினிமா

உதட்டில் முத்தம்- சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!

மும்பை, மே.18- நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மகளுக்கு உதட்டில் முத்தமிட்டு சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்த படம் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

எதை நினைத்து பயந்தாரோ அது நடந்து விட்டது. போலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சமூக வலைத்தளங்கள் பக்கம் இதுநாள் வரை எட்டிப்பார்க்காமல் இருந்தார். சமூக வலைத்தளங்களில் அதிகம் எதிர்மறை சிந்தனைகள் பரப்பப்படுவதாக அவர் எப்போதும் கருதி வந்தார்.

அந்த காரணத்திற்காகவே ஒதுங்கியே இருந்த அவர், அண்மையில் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை துவங்கினார். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற இடத்தில் தனது மகள் ஆராத்யாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார். அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

மேற்கத்திய நாட்டில் உள்ளவர்கள் போன்று சில இந்தியர்கள் தங்களின் குழந்தைகளுக்கு உதட்டில் ஏன் முத்தம் கொடுக்கிறார்கள்? என்று தெரியவில்லை. அசிங்கமாக உள்ளது. பல பிரபலங்கள் இதை தான் செய்கிறார்கள் என்று இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் ஐஸ்வர்யா புகைப்படம் பற்றி விமர்சன்ம் செய்திருந்தனர்.

ஐஸ்வர்யா ராய் ஆசை ஆசையாய் முதன் முதலாய் வெளியிட்டார் புகைப்படம் ஒன்று. முதலே மோசம் போனது போல நெட்டிசன்கள் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற தேவையில்லாத விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டுமே என்று பயந்து தான் ஐஸ்வர்யா ராய் இத்தனை நாட்களாக சமூக வலைத்தளம் பக்கமே வராமல் இருந்தார். ஆனால் தற்போது அலர் பயந்தது போலவே நடந்து விட்டது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker