Latestமலேசியா

என்னை அவமதிப்பவர் மீது வழக்கு வேண்டாம்! -மகாதீர்

கோலாலம்பூர்,மே.18- தம்மை அவமதிக்கும் வகையிலும் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் முகநூலில் பதிவிட்டிருந்த லங்காவியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் மீது வழக்கு விசாரணை என்று எதுவும் வேண்டாம் என்றார் அவர் இதைப் பற்றி போலீசாரிடம் தெரிவித்து உள்ளதாகவும் நாடாளுமன்றம் கூடும் பொழுது இந்தச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்று மகாதீர் தன்னுடைய டிவிட்டரில் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சில அரசுசார்பற்ற இயக்கங்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் எனவும் விசாரணைக்காக அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் முன்னதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைமையகம் தனது முகநூலில் பதிவிட்டு இருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker