Latestமலேசியா

குலசேகரன் – கோபிந்த் சிங் அமைச்சர்களாக நியமனம்!

கோலாலம்பூர், மே 18- மாமன்னர் அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து பிரதமர் துன் மகாதீர் இன்று வெளியிட்ட 14 அமைச்சர்களைக் கொண்ட பட்டியலில் எம். குலசேகரன் மற்றும் கோபிந்த் சிங் தியோ ஆகிய இருவரும் அமைச்சர்களாக இடம்பெற்றுனர்,

ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேவேளையில், பூச்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  கோபிந்த் சிங், தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமானா கட்சியின் வியூக இயக்குனர் டாக்டர் ஷுல்கிப்ளி அகமட் சுகாதார அமைச்சராகவும் பிரிபூமி பெர்சத்து கட்சியைச் சேர்ந்த விரிவுரையாளர் டாக்டர் மாஸ்லி மாலிக், கல்வி அமைச்சராகவும் நியமிக்கப் பட்டிருப்பதும் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர்சத்து கட்சி சார்பில் மூவரும் பிகேஆர் கட்சி சார்பில் மூவரும் ஜசெக சார்பில் நால்வரும் அமானா நெகாரா சார்பில் மூவரும் அமைச்ச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை விபரம் வருமாறு:

1,. Prime Minister – Tun Dr Mahathir Mohamad (Pribumi – Langkawi)

2. Deputy Prime Minister and Minister of women and family development  – Datuk Seri Dr Wan Azizah Wan Ismail (PKR – Pandan), 

 3. Home Minister – Tan Sri Muhyiddin Yassin (Pribumi – Pagoh)

4. Education Minister – Dr Maszlee Malik (Pribumi – Simpang Renggam)

5. Minister of Rural Development – Rina Harun (Pribumi – Titiwangsa)

6. Minister of Economic Affairs – Datuk Seri Mohamed Azmin Ali (PKR – Gombak)

7. Minister of Housing and Local Government – Datuk Zuraida Kamaruddin (PKR – Ampang)

8. Minister of Finance –  Lim Guan Eng (DAP-Bagan)

9. Minister of Transport – Anthony Loke Siew Fook (DAP-Seremban)

10. Minister of Communications and Multimedia – Gobind Singh Deo (DAP-Puchong)

11. Human Resource Minister – M. Kulasegaran (DAP-Ipoh Barat)

12.  Defence Minister –  Mohamad Sabu (Amanah – Kota Raja)

13.  Minister of Agriculture and Agro-Based Industry –  Salahuddin Ayub (Amanah – Pulai)

14. Health Minister –  Dr Dzulkefly Ahmad (Amanah – Kuala Selangor)

இந்த அமைச்சர்களின் பதவியேற்பு சடங்கு, மே 21ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் இஸ்தானா நெகாராவில்  மாமன்னர் முன்னிலையில் நடைபெறும்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker