Latestமலேசியா

தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்

கோலாலம்பூர்,மே.18-மே 9ஆம் தேதி தேர்தலன்று தேர்தல் முன்னாள் பிரதமர் நஜீப் தன்னை இரண்டு முறைத் தொடர்புக் கொண்டதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பேரரசர் ஐந்தாம் முகம்மட் முழு அரச மன்னிப்பு வழங்கிய பின்னர் சில தினங்களுக்கு விடுவிக்கப்பட்ட அன்வார் இப்ராகிமிற்கு, நஜீப் தேர்தல் நடந்த இரவன்று தொலைபேசியில் அழைத்துள்ளார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி பெரும் தோல்வி அடைந்தது கொண்டிருந்த நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என அறிவுரைக் கேட்கவே அவர் தன்னை தொலைபேசியின் மூலம் தொடர்புக் கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.

அதற்கு தாம் நஜிப்பைக் காலதாமதமின்றி தேர்தல் முடிவுகளை வெளியாக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, ஒரு நண்பனாக தாம் அவருக்கு அறிவுரை வழங்கியதாக நேற்று அன்வார் தெரிவித்தார். மேலும், தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த நஜீப், “இது குறித்து வேறு யாருடனாவது  பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? எனபதைக் கண்டறியவும் முயன்றார்  எனவும் அன்வார் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker